கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த மன்வீர் பீர் மற்றும் கிஷோர் பீர் என்பது தெரியவந்துள்ளது.
அதன்பின் அவர்களிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அர்ஜுன் தாஸ் சென்ற நபர் 5,000 ரூபாயை கூகுள் பே மூலம் செலுத்தி ஒரிசாவில் இருந்து கஞ்சாவை எடுத்து வர சொன்னது தெரியவந்துள்ளது. இதனால் அர்ஜுன் தாசையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.