காங்கிரசின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கணவருக்கு ,கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் வீட்டில் சில நாட்களுக்கு ,தனிமைப்படுத்திக் கொண்டார் என தகவல் வெளியானது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று பரிசோதனையின் உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் கணவர் மருத்துவரின் ஆலோசனைப்படி ,வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் மருத்துவரின் ஆலோசனைப்படி, சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக பிரியங்கா காந்தி மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் இவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதால், மருத்துவரின் ஆலோசனை காரணமாக பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். அதன்படி இன்று பிரியங்கா காந்தி, அசாம் மாநிலத்திலுள்ள கோல்பாரா ,கோலக்கஞ்ச் மற்றும் கயாகுச்சி போன்ற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில்,தற்போது ரத்தானது. இந்த பிரச்சாரங்களை ரத்து செய்யுமாறு, மாநில காங்கிரஸ் நிர்வாகத்திடம் , இந்த தகவல் அனுப்பினார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த தகவலை தெரிவித்தார் . இதைத்தொடர்ந்து அவர் தமிழகத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாளை பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் ,அதுவும் ரத்து செய்யப்பட்டது.