காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள புதுப்பேட்டை தெருவில் இதயாத் உசேன் (32) என்பவர் வசித்து வருகிறார் .இவரின் மனைவி பர்கித்பீவி(30). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில நாட்களாக இதயாத் உசேன் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் . அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .அதனால் பர்கித்பீவி மனமுடைந்து தனது தாய் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை பர்கித்பீவின் தாய் கழிவுநீர் தொட்டி திறந்து இருப்பதை கண்டு உள்ளே எட்டி பார்த்தார். அப்போது தனது மகள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாயார் காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பர்கித்பீவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்கிபீவியின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி ஒரே வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.