Categories
தேசிய செய்திகள்

என்னை விட்டுட்டு அவக்கூட ஷாப்பிங் கேக்குதோ?…. கணவரை வெளுத்து வாங்கிய மனைவி…. வெளியான வைரல் வீடியோ….!!!!

உத்திரப்பிரதேசம் காஜியாபாத்தை சேர்ந்த மணீஷ்திவாரி என்பவர் தன் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் வந்துள்ளார். இதையடுத்து அவர் ஒவ்வொரு கடையாக ஏறி தன் காதலிக்கு வேண்டிய பொருட்களை ஆசையாக வாங்கிக்கொடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத வகையில் திவாரியின் மனைவியும் தன் தாயாருடன் ஷாப்பிங் வந்திருந்தார். அதுமட்டுமின்றி திவாரி தன் காதலியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அதே கடைக்குள் அவரின் மனைவியும் உள்ளே வந்துவிட்டார்.

அப்போது தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்ததை திவாரி மனைவி பார்த்துள்ளார். உடனடியாக தன்  கணவருடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன் கணவரின் சட்டை காலரை பிடித்து அவரை சரமாறியாக வெளுத்து வாங்கினார். அப்போது திவாரி அடிபடுவதை பார்த்து அவருடன் வந்த பெண் அதை தடுக்க முயன்றார்.

இதனால் அப்பெண்ணுக்கும் தர்ம அடி விழுந்தது. இந்த சண்டை காட்சியை யாரோ தன் மொபைல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டார். அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக திவாரியின் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Categories

Tech |