சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் சந்தேகம் அடைந்ததால் மனம் உடைந்து சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
திரையுலக நடிகை சித்ரா செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் தற்கொலை குறித்து போலீசார் சித்ராவின் பெற்றோர்கள், அவரது கணவர் ஹேம்நாத், கடைசியாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், ஹேம்நாத் பெற்றோர்கள், போன்றோரிடம் பல கோணங்களில் விசாரணை செய்தனர். ஹேம்நாத் திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் கூறும் பதில் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் அவரை சந்தேகித்த போலீசார் மீண்டும் மீண்டும் அவரை விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து சித்ரா மற்றும் ஹேம்நாத் இன் தொலைபேசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிலுள்ள தகவல்களை கண்டறியும்போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியானது. இதனை அடிப்படையாகக் கொண்டு சித்ராவை தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்டது ஹேம்நாத் தான் என்று உறுதியானது . பின் அவரை நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
போலீசார் இது குறித்து கூறும் பொழுது ஹேம்நாத் துக்கு வசதியான நண்பர்கள் அதிகம் இருப்பதாகவும், அவர்களுடன் படப்பிடிப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்பொழுது சித்ரா ஹேம்நாத் துக்கு அறிமுகமாகியுள்ளார். அதன் பின் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பின்பு இருவரின் வீட்டார் சம்மதத்தோடு நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் பதிவுத் திருமணமும் செய்தனர். திருமணத்திற்குப் பின்பு இவர்களது வாழ்க்கையில் சந்தேகப் புயல் ஒன்று வீச ஆரம்பித்துள்ளது. ஹேம்நாத் மது அருந்தும் பழக்கம் உடையவர். அவர் மது அருந்திவிட்டு சித்ராவின் மீது சந்தேகம் கொண்டு உள்ளார்.
சித்ராபடப்பிடிப்பு இடம் போன்ற அனைத்து இடங்களிலும் அனைவரிடமும் சகஜமாக பேசும் குணம் உடையவர். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அவரிடம் ஹேம்நாத் இன்று எந்த நடிகருடன் ஆட்டம் போட்டாய், யாருடன் நெருக்கமாக இருந்தாய் என்று சித்ராவின் மனதை காயப்படுத்தும் படி பேசியுள்ளார். இதனால் சித்ரா மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். இதுமட்டுமல்லாமல் சித்ரா நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கும் ஹேம்நாத் சென்று சித்ரா வேறு யாருடனும் தொடர்பில் உள்ளாரா என்று கண்காணித்து வந்துள்ளார். சித்ரா இறப்பதற்கு முன் நடித்துவந்த நாடகத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகருடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் இருந்தது.
இதைக் காரணம் காட்டி சித்ராவை சந்தேகப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், சம்பவத்தன்று சித்ராவை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு படப்பிடிப்புத் தளத்திற்கு ஹேம்நாத் சென்றுள்ளார். அங்கு சித்ரா தன்னுடன் நாடகத்தில் தனக்கு கணவராக நடிக்கும் நடிகருடன் இருந்ததை பார்த்த ஹேம்நாத் சித்ராவை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் காரிலேயே இருவரும் சண்டையிட்டுள்ளார் . தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு இருவரும் உச்சக்கட்ட சண்டையோடு வந்து சேர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து சித்ரா “நீ எனக்கு முக்கியம் என்னை விட்டுப் போகாதே” என்று கூறியுள்ளார். ஆனால் ஹேம்நாத் “நீ இருப்பதற்கு இறந்து விடலாம்” என்று கூறியுள்ளார். இதனால் கோபம் கொண்ட சித்ரா ஹேம்நாத்தை அறையிலிருந்து வெளியே அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் தன் தாயிடம் கடைசியாகப் பேசி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ஹேம்நாத் கடந்த 6 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே சோகத்துடன் காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் அதன்பின் மிகவும் சகஜமாகவும் வந்துள்ளார். ஹேம்நாத் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சித்ராவிற்கு ஒரு பக்கம் பணிச்சுமை மறு பக்கம் தாயை பிரிந்த சோகம் இதையடுத்து கணவர் தன் மீது சந்தேகித்தது போன்ற காரணங்களால் சித்ரா தற்கொலை செய்து கொண்டதது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. சின்னத்திரை நாடகங்களில் தான் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்று பலமுறை ஆராய்ந்து நடிக்கின்றனர். ஆனால் சித்ரா தன் வாழ்க்கையில் சரியான கணவரை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டார் என ரசிகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஹேம்நாத்தின் தாய் வசந்தா மற்றும் தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ அதிகாரி திவ்யஸ்ரீ ஹேம்நாத் குடும்பத்தாரிடம் தனித்தனியாக 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.விசாரணை முடிந்து வெளியே வந்த ஹேமநாத் தந்தை ரவிச்சந்திரன் தனது மகனை சம்மந்தமில்லாமல் கைது செய்து விட்டதாகவும், யாரை காப்பாற்றுவதற்கு என் மகனை அவசர அவசரமாக கைது செய்தார்கள் என்பதும் தெரியவில்லை என்று நிருபர்களிடம் கூறினார்.
விசாரணையில் தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் வரதட்சணையாக நாங்கள் சித்ராவிடம் எதுவும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்ரீ பெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ ஹேம்நாத் இருக்கும் சிறை அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஹேம்நாத் நாளை விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.