வியாபாரி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி புதுப்பேட்டை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரசெக்கு மூலமாக எண்ணெய் தயாரித்து வியாபாரம் செய்து வருகின்றார். அதன்பின் லோகநாதன் மரபுவழி மற்றும் இயற்கை ஆர்வம் உடையவர் என கூறப்படுகின்றது. இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின் கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதில் இவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி பிரசவத்துக்கான நாள் குறித்துள்ளனர். ஆனால் டாக்டர்கள் கொடுத்த தேதியில் கோமதிக்கு பிரசவத்திற்கான எந்த அறிகுறியும் ஏற்படாமல் கடந்த 18-ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மரபுவழி மற்றும் இயற்கை ஆர்வலரான லோகநாதன் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து தனது அக்காவை உதவிக்கு அழைத்து சமூக வலைதளமான யூ டியூப்பில் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் கோமதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் கோமதிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் குழந்தை மற்றும் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களாக கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி மருத்துவர் மோகன் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லோகநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.