தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
லண்டனில் Wembley பகுதியை சேர்ந்த Mee Kuen Chong என்பவர் கடந்த ஜூன் 11- ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் டெவன் கடற்கரை ரிசார்ட் பகுதியில் தலையில்லாமல் கிடந்த பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த பெண் லண்டனில் மாயமான பெண்தான் என உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜூன் 10ஆம் தேதி முதல் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட ஜூன் 27ஆம் தேதி வரை நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல் கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .