Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் இறப்புக்கு பின்…. புது முயற்சியில் இறங்கிய மேக்னா ராஜ்…. வெளியான தகவல்….!!!!

தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். இதையடுத்து மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் இவர் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற 2020-ல் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத வகையில் மாரடைப்பால் இறந்தார்.

அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு சென்ற 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டுமாக நடிப்பிற்கு திரும்பியிருக்கும் மேக்னா ராஜ் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மேக்னா ராஜ் தன் பெயரில் புது YouTube சேனல் ஒன்றை தொடங்கி உள்ளார். ரசிகர்களுடன் நேரடியாக பழகுவதற்கும் தன்னை குறித்த புது விஷயங்களை அவர்களுக்கு தெரிவிப்பதற்கும் இந்த சேனலை அவர் தொடங்கியுள்ளதாக கூறினார்.

Categories

Tech |