தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகர் பகுதியில் செல்வநாயகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு திருமணமான ஜெப செல்வி மற்றும் ஜெப கிறிஸ்டி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வநாயகத்தின் மகள்களான ஜெப செல்வி மற்றும் ஜெப கிறிஸ்டி ஆகிய இருவரும் இணைந்து தனது பெற்றோரை பார்ப்பதற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வநாயகம் வேலைக்கு சென்றதால் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் வீட்டில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து செல்வநாயகத்தின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் சாப்பிட்டுவிட்டு உறங்குவதற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பின் பகுதியில் இருந்த கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ஜெப செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 7 தங்கச்சங்கிலியை சத்தமில்லாமல் கழற்றி ஜெப கிறிஸ்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த ஜெபகிறிஸ்டின் திடீரென கண்விழித்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்ட மர்ம நபர்கள் நாம் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து ஜெப செல்வி தனது கழுத்தைத் தொட்டுப் பார்த்தபோது நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து செல்வநாயகத்தின் மனைவி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் படி காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.