Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அருங்காட்சியம்…. பொதுமக்கள் கண்டு ரசிக்க…. இந்த தேதி வரை அனுமதி….!!

விருதுநகர் அருங்காட்சியகத்தில் காமராஜர் புகைப்பட கண்காட்சி வருகிற 24-ம் தேதி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்க அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24 -ஆம் தேதி வரை காமராஜர் குறித்து பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கண்காட்சியில் அவரது சாதனைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் போன்ற புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சியை வருகின்ற 24-ஆம் தேதி வரை கண்டு ரசிக்கலாம் என்று அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |