Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காமராஜர் பல்கலை …. தொலைதூர கல்வி தேர்வில் முறைகேடு …..!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான முழு விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய பருவத் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கள் விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரள மாநில தேர்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. அவற்றை ஆய்வு செய்ததில் 30 விடைத்தாள்களில் கூடுதலாக எழுதப்பட்ட பக்கங்கள் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து ஒரு லட்சம் விடைத்தாள்களையும் சோதிக்கும் வகையில் விடைத்தாள் திருத்தம் ஒத்திவைக்கப்பட்டது. முறைகேடு குறித்து மூத்த சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் வரும் 21-ஆம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடு குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருந்தார். அதன்படி முறைகேடு குறித்து முழு விசாரணை அறிக்கை ஆளுநருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. கிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.

Categories

Tech |