‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ”இந்தியன்2” படத்தில் நடிக்கிறார். சமீபத்தில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க தயாரானார்.
இந்நிலையில், ”இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.