பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இறுதிப்போட்டிக்கு ஆரி, ரியோ , சோம் , ரம்யா, பாலா , கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் . இவர்களில் பிக்பாஸ் கொடுத்த பணப் பெட்டியுடன் கேபி போட்டியில் இருந்து விலகி வெளியேறினார் . இதனால் தற்போது இறுதிப்போட்டியில் ஆரி ,ரியோ ,சோம், ரம்யா ,பாலா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர்.
#BiggBossTamil இல் இன்று.. #Day104 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/mRXXlqNmaU
— Vijay Television (@vijaytelevision) January 16, 2021
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் ‘கமல்ஹாசன் இந்த ஐவரில் வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் உங்களின் ஓட்டுகள் வந்து சேர்ந்து விட்டன . இந்த 100 நாட்களில் எதிர்பாராத பல திருப்பங்களை நாம் பார்த்துவிட்டோம். இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது என்று கூறுகிறார். அந்த ஒரு திருப்பம் என்னவாக இருக்கும்? இன்றே ஒருவர் வெளியேற்றப்படுவாரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .