நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராவார். இவர் அவரது வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்த வலியுடன் கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட போது அவரது காலில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ராமசந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பின் அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு சென்று ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களும் அவரது வீட்டில் ஓய்வு எடுப்பார் என்று கட்சி நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வின் போது கட்சி நிர்வாகிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை கூட்டங்களை நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். அதன்பின் கமல்ஹாசன் கூறும்போது நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.