Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் இல்லாமல் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு… படக்குழு எடுத்த முடிவு…!!!

கமல்ஹாசன் இல்லாமல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ தயாராகி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . இதையடுத்து எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து உயிர் இழப்புகள் ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது . இதனிடையே படத்திலிருந்து இயக்குனர் சங்கர் விலகுவதாக தகவல் கசிந்தது . ஆனால் அதை படக்குழு மறுத்தது. தற்போது நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

Kamal Haasan Does The Unthinkable in Indian 2

மேலும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதோடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் இல்லாமல் அடுத்த மாதம் இந்தியன்2 படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதில் கதாநாயகி காஜல் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர் . தேர்தல் பணிகள் முடிந்தபின் நடிகர் கமல்ஹாசன் காட்சிகளை ஒரே கட்டமாக நடித்துக் கொடுப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது .

Categories

Tech |