Categories
மாநில செய்திகள்

“திமுக பேரணியில் கமல் பங்கேற்கமாட்டார்”- மக்கள் நீதி மய்யம்!

கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் டிச.23ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது 

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு  பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தமிழகத்திலும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக சார்பில் 23-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Image

மாபெரும் பேரணியில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி விவசாய அமைப்புகள் , வணிகர் சங்கங்கள் , திரைத்துறையைச் சார்ந்த சங்கங்கள், ஆசிரியர் அமைப்புகள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் பேரணியில்  பங்கேற்குமாறு மக்கள் நீதிக்கு மய்யம் அலுவலகத்திற்கு நேரில் சென்று  திமுகவின் அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி, தலைமை நிலை செயலர் பூச்சி முருகன் ஆகியோர் கமலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

Related image

இந்த நிலையில்,கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் சென்னையில் டிச.23-ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |