ரத்த தானம் செய்வதன் மூலம் உயிர் காப்பதை நீங்கள் உங்கள் கண் முன்னே காண்பீர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து 4 லட்சம் யூனிட்க்கும் மேல் ரத்த தானம் செய்து வந்துள்ளனர்.
4 லட்சத்திற்கும் மேலான உயிர்களைக் காப்பதற்கான முயற்சி இது. நீங்கள் செய்த இந்த முயற்சி. உயிர் காப்பதை உங்கள் கண் முன் நீங்கள் காண்பீர்கள். தொடர்ந்து உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய்ய தாமாக முன் வருவோம், உயிர் காப்போம் என அவர் பதிவிட்டிருந்தார்.
கடந்த 40 ஆண்டுகளில் நம் நற்பணி அணியினர் 4 இலட்சம் யூனிட் இரத்த தானம் செய்துள்ளனர். 4 இலட்சம் உயிர்களைக் காக்கும் முயற்சி அது. உங்கள் உதவி, உயிர் காப்பதை கண்முன் காண்பீர்கள். உலக இரத்த தான தினமான இன்று, இரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம்; நம் தானம் தொடர்வோம்.
உயிர் காப்போம்.— Kamal Haasan (@ikamalhaasan) June 14, 2020