இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் .
சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார்.
இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு அருகாமையில் செருப்புகள் வீசப்பட்டன. மேலும் இவ்வாறு பேசியதால் பல்வேறு எதிர்ப்புகள் கமலுக்கு வந்ததையடுத்து கரூர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கமல் மீது புகார் அளித்தார் . அதன்படி, அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. இதனையடுத்து மதுரை கிளை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கமல் முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார்.