நபர் ஒருவர் கமலிடம் பிரசாரத்தின் போது அனிதா சம்பத் போவாளா என்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த வருடம் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் கமலும், ரஜினியும் புதிய கட்சி ஆரம்பித்து, தற்போது அரசியலில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கியுள்ளது. மேலும் ஒருவருக்கொருவர் குறை கூறி விமர்சித்து வருகின்றனர். தற்போது அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கமல் அவர்கள் திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டபோது செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டமாக நின்றுள்ளனர். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் சத்தம் போட்டபடி “அனிதா சம்பத் போவாளா எப்படி” என்று கேட்டுள்ளார். இந்நிலையில் “அனிதா போவாளா” என்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
https://twitter.com/i/status/1340952929017032706