Categories
அரசியல்

“பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்…. அவமானப்படுத்த முடியாது”…. நடிகர் கமலஹாசன்…!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதனை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, “ஒவ்வொரு தடவை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்படும் போதும், அவர் மேலும் வீச்சு மற்றும் வீரியத்துடனும் இன்றைய தலைமுறையினரிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்த மட்டும் தான் முடியும். அவமானப்படுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |