அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது , ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கமலின் சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். இதில் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்று தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் மீது அனைவரின் பார்வையும் இருந்தது .ஆனால் நடிகர் ரஜினிகாந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்பபோவதில்லை என்று அறிவித்தார். நடிகர் கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்து வேள்ப்பாளர்களை அறிவித்து விட்டார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமலின் சகோதரர் சாருஹாசன் தெரிவிக்கையில் , அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது . கமல் ஒருநாளும் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது என்று கூறிய அவர், ரஜினியை பொறுத்தவரை அவருக்கு அரசியல் பெரிய வீழ்ச்சியாகவே இருக்கும். ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார்.ரஜினி கூறிய வார்த்தையை விரைவில் அவர் விரைவில் திரும்பப் பெற்றுக் கொள்வார். ரஜினியும் , கமலும் வெற்றிகரமான நடிகர்களாக இருக்க முடியும். சினிமா ஆபத்தானது என்றால், அரசியல் அபாயகரமானது என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார் .