பி.ஏ.பி. கால்வாயில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் உள்ள பி.ஏ.பி. கால்வாயில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்துள்ளது. இதனைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடுமலை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் இறந்த முதியவர் திணைகுளம் பகுதியில் வசிக்கும் காளியப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காளியப்பன் மகன் சின்ன கருப்பசாமி உடுமலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காளியப்பன் பி.ஏ.பி. கால்வாயில் இறங்கிய போது கால் வழுக்கி கீழே விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.