சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரதீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள் வருகின்ற 15-ஆம் தேதிக்குள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றிய வீர மங்கைகளுக்கும், விபத்துகளில் சிக்கியவர்கள், இயற்கை இடர்பாடுகள், திருட்டு மற்றும் தீ விபத்து ஆகிய சம்பவங்களின் போது தைரியத்துடன் செயல்பட்ட பெண்களுக்கு சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் கல்பனா சாவ்லா விருது பெற விரும்பும் பெண்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. எனவே தங்களின் நடவடிக்கை குறித்த ஆவணங்களுடன் சிவகங்கையை சேர்ந்த வீரதீர செயல்களில் ஈடுபட்ட மகளிர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த மாதம் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.