நடிகர் கார்த்தி தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் . நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் . இதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது கல்லூரி நண்பர்களுடன் பேருந்தில் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘சென்னை மக்களின் நம்பகமான நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் தான் செலவழித்திருக்கிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .