Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதனை படிக்க முடியவில்லை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கல்லூரி மாணவி மன உளைச்சலால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழத்தென்கலம் கிராமத்தில் விவசாயியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மகள் உள்ளார். கடந்த 30 – ஆம் தேதி சுமித்ரா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் சுமித்ராவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பிளஸ் 2 முடித்து வேளாண் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பிய சுமித்ராவிற்கு மதிப்பெண் குறைவாக இருந்ததால் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுமித்ராவின் பெற்றோர் அவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படிப்பிற்காக சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து சுமித்ராவை கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படிக்கவும் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த சுமித்ரா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |