Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள சிக்கன்னா கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து குமரேசனுக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வயிற்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த குமரேசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவினாசி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரேசனின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |