கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
1.) பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மாணவர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டம் வகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.) பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பான அறிக்கையில், மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பிதாக 53 youtube சேனல், 7 twitter பக்கம், 21 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டதாக தெரிவைக்கப்பட்டது. மேலும் மூன்று whatsapp குரூப்புகளின் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கலவரம் தொடர்பாக 63 போலீசார் உட்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில், மாணவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் நியமித்ததற்காக அரசுக்கு பாராட்டும், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.