ஸ்ரீபெரும்புதூரில் கள்ளக்காதலால் சித்ரா எனும் பெண் தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவர். அவருக்கு சித்ரா எனும் மனைவி இருக்கிறார். அவர்களுக்கு கார்த்திக் ,அருண் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகனான அருண் சில மாதங்களுக்கு முன் வீட்டின் படுக்கையில் தூங்கும் பொழுது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இப்போது சித்ரா தன் கணவனை பிரிந்து மூத்த மகன் கார்த்திக் உடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சித்ரா தன் மூத்த மகனான கார்த்திகை கழுத்தை நெரித்து சித்ரா கொலை செய்ய முயற்சித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஸ்ரீபெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சித்ராவை விசாரித்தனர். சித்ரா வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதால் தன் மகனை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து சித்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் கார்த்திகை மீட்டு செங்கல்பட்டு குழந்தை காப்பகத்தில் விட்டனர். இதனால் தீ விபத்தில் இறந்து போனதாக சொல்லப்படும் அருணையும் தாய் சித்ரா கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.