சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகில் உள்ள வெலங்கிராயன் பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தாசில்தார் சுமதி ஆகியோர் உடலைத் தோண்டி எடுத்தனர். அது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் என்பது தெரியவந்தது. அவரது உடலில் அதிக வெட்டுக்காயம் இருந்தது. ஆகையால் இவர் கொலை செய்யப்பட்டுஇந்தப் பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில், இறந்த வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் சத்யராஜ் (32). அவருக்கு தீபா (30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சத்யராஜிக்கு, அயப்பன் (29)என்ற நண்பர் இருக்கிறார். இருவரும் நண்பர் என்பதால் சத்யராஜ் வீட்டிற்கு அயப்பன் அடிக்கடி வந்துள்ளார். இதில் அய்யப்பனுக்கும் ,தீபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி விட்டது.
இதனை தீபாவின் கணவர் கண்டுபிடித்து விட்டார். அதனால் அவர்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சத்யராஜை அவரது மனைவி தீபா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு அவரது உடலை புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தீபா, ஐயப்பன் மற்றும் அவருக்கு உதவி செய்த நண்பர்களை கைது செய்தது.