Categories
தேசிய செய்திகள்

பூங்காவில் உயிரிழந்த நபர்… “கல்லாக உறைந்த இருதயம்”… காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க….!!

கோவாவில் ஐம்பது வயது மதிப்புள்ள ஒருவரின் இருதயம் உறைந்து கல்லாக மாறி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தில் பிரபலமான பூங்கா ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால்  கண்டறிய முடியவில்லை. இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்  பரத் ஸ்ரீ குமார் என்பவரிடம் மருத்துவமனை நிர்வாகம் அந்த நபரின் உடலை ஒப்படைத்தது.

இந்நிலையில் மருத்துவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், உயிரிழந்த நபரின் இருதயம் முழுவதும் கல்லாக உறைந்திருந்தது. இது போன்ற சம்பவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் . இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “உடற்கூறு ஆய்வில் அவரின் இதயத்தை வெளியே எடுத்தபோது  பொதுவாக ஒருவருக்கு  இருக்கக்கூடிய இருதயத்தின் எடையைவிட அந்த நபரின் இருதயம் அதிக அளவு கனமாக இருந்தது.

ஆனால் அவரது இருதயம் பார்ப்பதற்கு சாதாரண இருதயம் போன்று தான் இருந்தது. மேலும் அதனை கத்தியால் வெட்டவும் இரண்டாக பிளக்கும் முடியாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.  இறுதியில் போராடி அவரது இதயத்தின் ஒரு பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினோம். ஆய்வில் , சாதாரண திசுக்களை கடினமான இழைம திசுக்களாக மாற்றும் ஓர் விசித்திர நோயால் அந்த நபர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரியவந்தது .

அவரது இருதயம் கடின இழைம திசுக்களாக மாறியதால் அவர் உயிரிழந்தார்” என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கோவா மருத்துவக்கல்லூரி, உயிரிழந்த நபரின் புகைப்படத்தையும் அவர் குறித்த எந்த  விதமான தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அந்த நபரின் இருதயம்  கடினமான  இழைம திசுக்களாக மாறிய புகைப்படம் ஒன்றை  மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |