ரேஷன் அரிசி மூட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் குருசேத்ரா பள்ளி எதிரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் 1 டன் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக வேல்பாண்டி என்பவரை விசாரணை செய்த போது ரேஷன் அரிசியை பெருங்களத்தூர் உள்பட 12 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் வேல்பாண்டியை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.