Categories
உலக செய்திகள்

கால் வலினு சென்ற பெண்… திடீரென பிறந்த குழந்தை…. நடந்தது என்ன?… அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவில் ஓமாஹா நகரில் பேய்ட்டன் ஸ்டோர்(23) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் ஆசிரியர் பணியில் புதிதாக இணைந்துள்ளார். இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவர் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது அவருக்கு செய்யப்பட்ட பரிசுதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சோதனை தவறாக இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கு இரண்டு மூன்று முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பேய்ட்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்று மருத்துவர் உறுதி செய்துள்ளார். கால்களின் வீக்கம் என்று மருத்துவரை சந்திக்க பேய்ட்டனுக்கு அதுவே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை மகிழ்ச்சி என்றாலும் அதற்கு அடுத்ததாக மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, கர்ப்பமாக இருக்கும் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து பரிசோதனைகளும் செய்து கற்பிணி ஆரோக்கியமாக இருக்கிறாரா, குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிலும், ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு ஆகியவை தொடர்ச்சியாக சரிபார்க்கப்பட வேண்டும். ஆனால் பேய்ட்டனுக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த காரணத்தால் அவருடைய கல்லீரல் மற்றும் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது என்று மருத்துவர் தெரிவித்தனர். உடல்நிலை மோசமாக இருப்பதால் குழந்தை உடனடியாக டெலிவரி செய்ய வேண்டும் என்று மருத்துவர் பேய்ட்டன் மற்றும் அவரது பார்ட்டனிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவசர கால சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். பேய்ட்டனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பத்து வாரத்துக்கு முன்பே பிறந்திருக்கிறது. குழந்தையின் எடை 1.800 கிராம் இருந்தது. பேய்ட்டன் பிறந்தநாள் அன்று தான் அவருடைய குழந்தையும் பிறந்து இருக்கிறது. இது அவரின் குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |