காஜல்அகர்வால் விலகிய கோஸ்ட் படத்தில் இலியானா நடிக்கவில்லை என படக்குழு கூறியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடித்து வரும் கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இது குறித்து படக்குழுவிடம் தெரிவித்துவிட்டு அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டார்.
இதையடுத்து காஜல் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகை இலியானா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது. ஆனால் இதனை படக்குழு மறுத்துள்ளது. கோஸ்ட் படத்தில் காஜல் நடித்திருந்த வேடத்தில் நடிகை இலியானா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை என்று கூறிய படக்குழு தற்போது வளர்ந்து வரும் சில நடிகைகளிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது கோஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்குள் வேறொரு நடிகை தேர்வு செய்வதற்கான பணியில் படக்குழு தீவிரமாக இருக்கிறது.