பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியின் போது , பென் ஸ்டோக்ஸ்க்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டது.
கடந்த 12ம் தேதி மும்பையில் நடந்த போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது கிறிஸ் கெயில் அடித்த ,பந்தை பென் ஸ்டோக்ஸ் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்தை கேட்ச் பிடித்த , பென் ஸ்டோக்ஸ்க்கு கைவிரலில் அடிபட்டது. மருத்துவ பரிசோதனை செய்த போது கை விரலில் முறிவு ஏற்பட்டதால், நடப்பு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார், என்று ராஜஸ்தான் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் அணியிலுள்ள வீரர்களுக்கு, அவர் ஆலோசனை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. மீண்டும் பரிசோதனை செய்த, எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுத்தபோது ,கைவிரலில் முறிவு ஏற்பட்டு இருப்பது தெளிவாக தெரிவது. பென் ஸ்டோக்ஸ் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் கூறினர் . இதனால் 12 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாததால் , தன்னுடைய சொந்த நாடான இங்கிலாந்திற்கு பென் ஸ்டோக்ஸ் இன்று திரும்பவுள்ளார் .அதன் பின் பென் ஸ்டோக்ஸ் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார் .