மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி கூட்ரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அத்தியூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார்.
அதன்பின் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மோகன் ஆகிய இருவரும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மோட்டார் சைக்கிள்களை திரட்டி அவற்றை துத்திப்பட்டியில் பதுக்கி வைத்திருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்ததோடு, பதுக்கி வைத்திருந்த மொபட் உட்பட 9 இரசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.