சென்னை அம்பத்தூரில் இளைஜரை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
திலீப்குமார் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக தெரிகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தீலிப்குமாரை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து திலீப்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்கு பணம் கொடுத்து தமிழ்ச்சந்திரன், நரேஷ் குமார் ஆகிய மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர், மேலும் இருவரை தேடி வருகின்றனர்