கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாநாயகன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர்
கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த கைதி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் எந்த ஒரு பாடல்களும் இல்லாது இயக்கப்பட்ட படம். கைதி திரைப்படம் பிகில் வெளியாகும் நாளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து கைதி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியர் இணைந்து இந்த படத்தின் ரீமேக்கை தயாரிக்கின்றனர்.
இதன்மூலம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஹிந்தி திரையுலகில் கால்பதிக்க உள்ளனர். கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? அமீர்கான், ஹிருத்திக் ரோஷன் என சமூக வலைத்தளங்களில் பேசிய வண்ணம் இருந்தனர் பலர். ஆனால் கார்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் அஜய்தேவ்கன் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தகவல் அளித்துள்ளனர்.