சந்தையில் தேக்கமடைந்த 30 டன் காய்கறிகளை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு நேற்று மூடப்பட்டது.
இதன் காரணமாக தேங்கிக்கிடந்த 30-டன்னிற்கும் மேற்பட்ட காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் கீழப்பாவூர் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். தங்கள் சொந்த செலவில் ஆட்டோக்களில் சென்று வீடு வீடாக காய்கறி வழங்கிய வியாபாரிகளை மக்கள் நன்றியுடன் பாராட்டியுள்ளனர்.