Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் விதிமீறி செயல்படுது…. சமூக ஆர்வலர்களின் கேள்வி …. பயத்தில் பொதுமக்கள் கோரிக்கை ….!!

திருப்பத்தூரில் விதிகளை மீறி சமூக இடைவெளியின்றி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருகின்றது. இதுவரையிலும் 2 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் அனைத்து இடங்களிலும் இருக்கின்ற உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் போன்றவை வேறு இடத்திற்கு மாற்றி சமூக இடைவெளியுடன் விற்பனை செய்வதற்கு கலெக்டர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருப்பத்தூரில் காய்கறி மார்க்கெட் ஒன்று இயங்கி வந்தது. அதனை வேறு இடத்திற்கு மாற்றும்படி  நகராட்சி ஆணையர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நகராட்சி காய்கறி மார்க்கெட் அதிமுக, திமுகவை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்து இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே அரசியல் காரணமாக அந்த காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யாததால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு குவிகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் நிலவுகின்றது. எனவே கலெக்டர் சிவனருள் உத்தரவிற்கு பிறகும் நகராட்சி பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருவது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பெரிய காய்கறி மார்கெட் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |