காட்டுப் பகுதியில் இருந்த காயை பறித்து சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருஞ்சிறை கிராமத்தில் ஜெய தர்ஷினி, பாலாஜி, சரவணன், கவின், சத்யபிரியா, கதிர், பொன் முகேஷ் போன்ற சிறுவர் சிறுமிகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறத்தில் காட்டுப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருக்கக்கூடிய ஒரு செடியில் இருந்து ஒரு காய்களைப் பறித்து சிறுவர்கள் சாப்பிட்டனர். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு வந்த போது சிறிது நேரத்தில் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அதன்பின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த சிறுவர், சிறுமிகளை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.