Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலுக்கு கத்திரி போட்ட ஓட்டல் உரிமையாளர் பழிக்குப்பழியாக உரிமையாளர் மகன் கடத்தல்…!!

சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுவனை சில மணி நேரங்களில் போலீசார் மீட்டனர். 

தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.ஹோட்டல் உரிமையாளரான இவரிடம் ஹரீஹரன் என்பவர் வேலைப்பார்த்து வந்தார். ஆனால் தங்கராஜின் உறவினர் பெண்ணை ஹரிஹரன் காதலித்ததால் அவரை வேலையிலிருந்து தங்கராஜ் நீக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையிலுள்ள மற்றொரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த ஹரிஹரன், தங்கராஜிக்கு தக்க பாடம் புகட்ட சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளார்.

அதன்படி தன்னுடன் வேலை செய்யும் விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து, தங்கராஜின் மகனை கடத்த திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக வாடகை காரை ஏற்பாடு செய்த இருவரும் முடிச்சூரில் இருந்த தன் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்ற தங்கராஜின் மகன் நவஜுவனை, சாமர்த்தியமாக கடத்திச்சென்றனர். மேலும் 5 லட்சம் ரூபாய் அளித்தால் நவஜுவனை விடுவிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் மறைமலைநகர் அருகே சென்று கொண்டிருந்த காரை மடக்கி பிடித்தனர். அதிலிருந்து நவஜுவனை மீட்ட போலீசார் ஹரிஹரன், விக்னேஷ் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த காரின் ஓட்டுநர் சரத்குமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |