கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறிய காதலர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் 14 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு சிங்கப்பூரில் உள்ளது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனிலிருந்து Nigel என்ற நபர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh Eyamalai என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்திக்க சென்றுள்ளார்.
ஆனால் விதிமுறைகளின்படி Nigel அங்குள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் . அதனால் அவர் தன் காதலி Agatha Magheshக்கு தான் தங்கியிருக்கும் ஹோட்டல் விவரங்களை செல்போனில் அனுப்பியுள்ளார் . அதை பார்த்த Agatha Maghesh உடனே Nigel தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் இரவில் யாருக்கும் தெரியாமல் Nigel தனது காதலியின் அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை தன் அறைக்கு செல்ல முயன்றபோது Nigel -ஐ அதிகாரிகள் அவரை பார்த்து விட்டனர் . இந்நிலையில் விதியை மீறி செயல்பட்ட Nigel -யும் அவரது காதலி Agatha Maghesh-யும் நீதிமன்றத்தின் முன் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். அப்போது,காதல் ஜோடியின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள்,
“Nigel – Agatha Maghesh-சிடம் காதலை சொல்வதற்காகத்தான் லண்டனில் இருந்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொள்ளாததால் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர் “என்று கூறினர். ஆனால் Nigel -க்கு 2 வாரங்கள் சிறைதண்டனையும், ஆயிரம் டாலர்கள் அபராதத்தையும் Agatha Maghesh-க்கு ஒரு வார சிறை தண்டனையையும் நீதிபதி வழங்கினார். மேலும் நீங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதை விட கொரோனா பரவாமல் தடுப்பது தான் முக்கியம் என்று நீதிபதி கூறிவிட்டார்.