காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே கணவன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகில் உள்ள உச்சிபொத்தை கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி என்பவர். வேல்சாமி சலவைத் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு 21 வயதுடைய பூங்கோதை என்ற மகள் இருந்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பூங்கோதை வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்திலேயே ஜோகிந்தர் எனும் 27 வயதுடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார்.
அங்கு இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்தனர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் செய்யும் வேலை பிடிக்காமல் சொந்த ஊரான பூங்கோதைக்கு வந்தடைந்தனர். ஒரு வாடகை வீட்டில் வசித்து ஜோகிந்தர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அது சண்டையாக மாறி உள்ளது. அதனால் ஜோகிந்தர் ஆத்திரமடைந்து பூங்கோதையின் கழுத்தை துணியால் நெறிதுள்ளார். கழுத்து நெறிப்பட்ட பூங்கோதை காதுகளில் ரத்தம் கசிந்து அந்த இடத்திலேயே தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் ஜோகிந்தர் வீட்டை பூட்டி விட்டு சாவியை பக்கத்தில் போட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பூங்கோதையின் வீட்டு கதவு வெகுநேரமாகியும் நேற்று திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
அருகில் சென்று பார்த்தபோது சாவி கீழே இருப்பதை கண்டு கதவைத் திறந்து பார்த்தனர். அங்கு பூங்கோதை தரையில் இறந்து இருப்பதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதன்பின் சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் பூங்கோதையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பூங்கோதை, குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்குமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவர் ஜோகிந்தர் பிடிபட்டாலே கொலைக்கான முழு தகவல் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் ஜோகிந்தரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.காதல் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலேயே கணவன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.