Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!…. கடவுள் கிருஷ்ணரை திருமணம் செய்த பெண்…. காரணம் என்ன?….!!!!!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள நர்சிங்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங்(30). இவர் முதுகலை பட்டம் வென்றவர் ஆவார். கடந்த 8ம் தேதி இவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார். இவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். பூஜாவின் தந்தைக்கு கிருஷ்ணர் உடனான திருமண நிகழ்ச்சியில் உடன்பாடில்லை. இதனால் அவர் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.

எனினும் பூஜா சிங்கின் தாயார், அவருக்கு முழுவதுமாக துணைநின்று திருமணத்தை செய்து வைத்துள்ளார். கிருஷ்ணர் சிலை முன்பு பூஜை சடங்குகள் அனைத்தையும் செய்த பூஜா, திருமணத்தை உறவினர்கள் மத்தியில் இந்து முறைப்படி மேற்கொண்டார். இது போன்ற திருமணத்துக்கு குடும்பத்தினரை சம்மதிக்கவைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல எனவும் விடாப் பிடியாக இருந்து தன் தாயாரின் சம்மதத்தை பெற்றதாகவும் பூஜா கூறினார்.

திருமணத்துக்கு பின் அவர் வீட்டிலுள்ள ஒரு சிறிய கோயிலில் கிருஷ்ணர் வைக்கப்பட்டு உள்ளார்.  அதாவது பூஜா, திருமணத்துக்கு பின் தன் வாழ்க்கை சீரழிந்துவிடக் கூடாது என்பதற்காகவே கிருஷ்ணரை திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |