லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் பிணம் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியதாக செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவின் மேற்குக் கடலோர நகரமான காம்ஸில் 27 அகதிகளின் சடலங்கள் கடந்த சனிக்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதைதவிர மேலும் 3 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதற்கு முன்னதாக ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த 27 நபர்களும் உயிரிழந்ததாக கருதப்படுகிறது. இதனையடுத்து குறிப்பிட்ட பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.