கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருதகுடி நெல்லப்பன்பேட்டை பகுதியில் நவதானிய வியாபாரியாக பழனிசெல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக பக்கத்து கிராமங்களில் மணிலா வாங்கி வந்து சின்னசேலத்தில் ஆயில் மில் நடத்திவரும் நைனார்பாளத்தை சேர்ந்த பெரியசாமியிடம் கொடுத்து வருகின்றார். அதன்படி பழனிசெல்வத்துக்கு 1 கோடியே 5 லட்சம் பாக்கியை பெரியசாமி தரவேண்டியது இருந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் 70 லட்சம் கடனை பழனிசெல்வத்திடம் பெரியசாமி காசோலையாக கொடுத்துள்ளார்.
ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னசேலத்தில் உள்ள ஆயில்மில்லுக்கு வந்த பலனிசெல்வம் பெரியசாமியிடம் தனக்கு தரவேண்டிய கடனை கேட்டுள்ளார். அப்போது பெரியசாமி, அவரது மனைவி தங்கம், மகன் பாலுசாமி மற்றும் 2 பேர் சேர்ந்து ஆயுதங்களை காட்டி பழனிசெல்வத்தை மிரட்டி இருக்கின்றனர். இதுகுறித்து பழனிசெல்வம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.