பிக்பாஸ் ரம்யாவுக்கு சோம் சேகர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சில தினங்களுக்கு முன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் சோம் சேகர். இளகிய மனம் கொண்ட சோம் தன் செல்லப் பிராணி குட்டு மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றி பலமுறை பிக்பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார் . மேலும் ரம்யா பாண்டியன் தனக்கு கொடுத்த சாக்லேட்டை சாப்பிடாமல் சோம் வைத்திருந்ததற்காக அவரது நண்பர்கள் அவரை செல்லமாக கிண்டல் செய்து வந்தனர் . இதையடுத்து சோம் டிக்கெட்டு பினாலே டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டு முதலாவது ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் .
இதன்பின் இறுதிப் போட்டியாளர்களில் ஐந்தாவது இடத்தை பிடித்து சோம் வெளியேற்றப்பட்டார் . அவரைத் தொடர்ந்து நான்காவது இடத்தைப் பிடித்து ரம்யாவும் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சோம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யாவுக்காக காதல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ரம்யா தனக்கு கொடுத்த சாக்லேட்டை குறிப்பிடும் வகையில் ஒரு கார்ட்டூனும், பிக் பாஸ் வீட்டில் ரம்யாவிடம் சோம் கூறிய ‘கடலை தான் போட முடியல சுண்டலாவது போடு’ என்ற வாசகத்துடன் ஒரு கார்ட்டூனையும் வெளியிட்டுள்ளார்.