Categories
உலக செய்திகள்

கடலையே சுற்றி வளைத்த போலீஸ்… போறதுக்கு வேற வழியே இல்ல… போதைப் பொருளுடன் சிக்கிய மீனவர்கள்…!!!

லட்சத் தீவு பகுதியில் 2,100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியக் கடலோரப் பகுதிகளில் இலங்கை மீனவ படகுகள் கடந்த சில நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பதை கடலோர காவல் ரோந்து  படையினர் கண்காணித்து கொண்டிருந்த நிலையில் சந்தேகமடைந்த கடலோர காவல் படையினர்அங்கிருந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் சில வெளிநாட்டு கப்பல்களும் சுற்றி வருவதை அறிந்த காவலர்கள் அங்குள்ள மீனவர்கள் இடத்தில் விசாரித்த போது அவர்களின் கப்பல்களில் சுமார் 260 கிலோ எடையுள்ள போதை பொருள்கள் இருந்ததாகவும் அப்போதே  பொருட்களை கடலில் வீசி எறிந்ததாகவும்  தெரிவித்தனர். இந் நிலையில் எறியப்பட்ட போதை பொருட்களின் சந்தை விலை ரூ . 2160 கோடி என்பதும் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளனர்

Categories

Tech |