Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் போச்சு…. பற்றி எரிந்த தீ…. வருத்தத்தில் உரிமையாளர்….!!

பலகாரக் கடையில் தீப்பற்றி எரிந்ததால் பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரத்தில் பலகாரம் மற்றும் டீக்கடை வைத்து மணி என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் மணி பலகாரம் தயார் செய்வதற்காக எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்து தீ எரிந்து கொண்டிருக்கும் போது அதிகமாக சூடு ஏறியதும் திடீரென எண்ணெய் சட்டியில் தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

இதனால் டீக்கடையின் கொட்டகையிலும் தீப்பிடித்து வேகமாக எரிய தொடங்கியது. பின்னர் கடைக்குள் இருந்த மிக்சர் தயாரிக்கும் எந்திரம் உள்பட பல பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி கட்டுப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |