Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…மதிப்பும், மரியாதையும் உயரும்…சிவன் வழிபாடு சிறப்பு..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று சிவாலய வழிபாட்டின் மூலம் சிறப்பை காணவேண்டிய நாளாகவே இருக்கும், மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக முயற்சி வெற்றியை கொடுக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும். இன்று எல்லா விதத்திலும் லாபம் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து கூடும்.

எதிர்ப்புகள் விலகி செல்லும். மனமகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இன்று குடும்பத்தில் எல்லா விதத்திலும் மகிழ்ச்சி நிலவும் . இன்று மற்றவர்களிடம் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள், அது போதும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை, கல்வியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரொம்ப சிறப்பாகவே செயல்படுவீர்கள். எதிலும்  மிகுந்து காணப்படும் முயற்சியிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

மஞ்சள் நிறம் உங்களுக்கு கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |